பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கர்.?

Author: Rajesh
26 April 2022, 4:36 pm

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது தந்தை வழியில் கிரிக்கெட்டில் பயணிக்கத் தொடங்கிவிட்டார். சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர் லண்டனில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாராவை டிவிட்டரில் 1.8 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். அடிக்கடி சாரா வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் பிரபலம். கடந்த ஆண்டே அவர் சில பிராண்ட் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

நடிகை பனிதா சந்து, தனியா ஸ்ரப் ஆகியோரும் சாராவுடன் நடித்திருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தங்களில் வெளியானது. மருத்துவம் படித்துள்ள 24 வயது சாராவிற்கு நடிப்பில்தான் ஆர்வம். எனவேதான் சில விளம்பர வீடியோக்களில் நடித்தார்.

இந்நிலையில், சாரா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகலாம் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘பெரும்பாலும் தன்னைப் பற்றி வெளியில் எதையும் தெரிவிக்காத சாரா, தனது நடிப்பு திறமையால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தக்கூடும் என்றே தெரிகிறது. அவர் மிகவும் திறமையானவர், அவருடைய பெற்றோர் சாரா எடுக்கும் முடிவை ஆதரிப்பார்கள்’ என சாராவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • chiyaan vikram new movie title is maaveeran movie dialogue மாவீரன் பட வசனத்தை விக்ரம் படத்திற்கு அப்படியே டைட்டிலாக வைத்த இயக்குனர்?