நடிகை சாயா சிங் வீட்டில் திருட்டு… கைவரிசை காட்டிய பணிப்பெண் சிக்கியது எப்படி?..

Author: Vignesh
15 May 2024, 4:00 pm

கடந்த 2000 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான முன்னாடி என்ற படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயா சிங். இவர் தனுஷ் நடிப்பில் பட்டித் தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பிய திருடா திருடி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிரடி ஆட்டம் போட ரசிகர்கள் இவரை கொண்டாடினார். ஆரம்பமே பெரிய வரவேற்பு கிடைத்தாலும், பெரிய நடிகர்களின் படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை விஜயுடன் ஒரு படத்தில் மட்டும் சாமி பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

chaya singh

மேலும் படிக்க: ‘ஜெயம்கொண்டான்’ பட நடிகையை நியாபகம் இருக்கா?.. அந்த நடிகருக்கு 2-ம் தாரமாக ஆகப் போறாராம்..!

20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது கேரக்டர் ரோல் களில் கலக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள சாயா சிங்கின் தாயார் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த 66 கிராம் தங்கம் மற்றும் 150 கிராம் வெள்ளி ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளன. இது குறித்து அவர் உடனே புகார் அளிக்க போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்து நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

chaya singh

மேலும் படிக்க: Adjustment பண்ண சொல்லி மிரட்டுனாங்களா?.. பிரியா பவானி சங்கர் கொடுத்த பகீர் பதில்..!

முன்னதாக, சாயா சிங்கின் தாய் வீட்டில் வேலை பார்த்து வந்த பணிப்பெண் உஷா என்பவர் நகைகளை திருடி சென்றதாகவும், அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சாயா சிங்கின் தாய் வீட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்படி விசாரணையில் பணிப்பெண் உஷா திருடியது வெளியாகி உள்ளது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 319

    0

    0