வெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!

Author: Selvan
27 December 2024, 10:03 pm

சாய் அபயங்கர் VS அனிருத்

தமிழ் சினிமாவில் தற்போது வளர்த்து வரும் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாய் அபயங்கர்,சமீபத்தில் ஒரு பேட்டியில் அனிருத்தை மறைமுகமாக தாக்கியுள்ளார்.

பிரபல பாடகரான திப்புவின் மகனான இவர்,பல ஆல்பம் பாடல்களை பாடி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.அதிலும் குறிப்பாக இவர் பாடிய கட்சி சேர மற்றும் ஆச கூட பாடல்கள் வேற லெவல் ஹிட் ஆகி ரசிகர்கள் பலரை முணுமுணுக்க வைத்தது.

Sai Abhayankar vs Anirudh

இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் மற்றும் ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா 45 படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இதையும் படியுங்க: தம்பி ஓரளவுக்கு தான் கொல காண்டில் விராட்கோலி…ஷாக் ஆன ஆஸ்திரேலியா ரசிகர்கள்…!

இந்த நிலையில் இவர் அளித்துள்ள பேட்டியில் “எனக்கு எப்போதும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள பிடிக்கும்,புது புது நுட்பங்களை கொண்டு வந்து, காட்சிகளுக்கு ஏற்ப வேலை செய்ய நான் விரும்புவேன்,வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்காக பாடலை போட்டு வந்தால்,அது ரசிகர்கள் மத்தியில் ரொம்ப நாள் நீடித்து இருக்காது என அனிருத் இசையமைத்து பாடிய ஹுக்கும் பாடலை அவர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

தற்போது அனிருத் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆன இருங்க பாய் என்ற வசனத்தை வைத்து விடாமுயற்சி பாடலை பண்ணியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ