ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!
Author: Selvan1 February 2025, 7:10 pm
படு வைரலாகும் சித்திர புத்திர பாடல்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி வருபவர் சாய் அபியங்கர்.இவர் பிரபல பாடகர்களான திப்பு-ஹரிணியின் மகன் என்பதால் சிறு வயதில் இருந்தே இசையின் மீது அதிக ஆர்வத்துடன் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர் இசையைமைத்து பாடி வெளிவந்த’கட்சி சேர’பாடல் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று இணையத்தில் படு வைரலானது.அதன் பிறகு இவர் ‘ஆசை கூட’ என்ற பாடலை ரிலீஸ் செய்தார்.இந்த இரண்டு பாடல்களும் அதிக பார்வையாளர்களை கவர்ந்து இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இதையும் படியுங்க: சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு அடித்த மெகா அதிர்ஷ்டம்…கொத்தா தூக்கிய பிரபல இயக்குனர்…!
இப்பாடலின் வெற்றியால் இவருக்கு சினிமாவில் இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய அடுத்த பாடலான சித்திர புத்திர பாடலை வெளியிட்டுள்ளார்.இப்பாடலில் பிரபல நடிகை மீனாட்சி சவ்திரியுடன் சாய் அபியங்காரும் நடனமாடி அசத்தியுள்ளார்.
தற்போது ரசிகர்கள் மத்தியில் இப்பாடல் பிரபலம் ஆகி யூடியூப் ட்ரெண்டிங்கில் NO2-ல் உள்ளது.இதனால் சாய் அபியங்கர் தன்னுடைய ஹாட்ரிக் வெற்றியை ருசித்துள்ளார்.
இவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கம் சூர்யா படத்திற்கும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.