சிம்பு படத்திற்கு NO சொன்ன அனிருத்…களத்தில் இறங்கிய இளம் இயக்குனர்.!

Author: Selvan
16 February 2025, 4:08 pm

சாய் அபியங்காருக்கு குவிந்த பட வாய்ப்பு

தமிழ் சினிமாவில் தற்போது பல ஸ்டார் நடிகர்களுக்கு இசையமைத்து பிஸியாக வலம் வருகிறார் ராக் ஸ்டார் அனிருத்.இவருடைய இசை தற்போதுள்ள இளைஞர்களை வைப் ஆக்கி வருவதால் பலரும் தங்களுடைய படத்திற்கு இசையமைக்க அனிருத்தை தேடி செல்கின்றனர்.

இதையும் படியுங்க: படம் ஓடாதுனு தெரிஞ்சும் எடுத்தேன்… இயக்குனர் சுசீந்திரன் வைரல் பேட்டி.!

அந்த வகையில் சிம்பு நடிக்க உள்ள STR 49 படத்தில் அனிருத்தை இசை அமைக்க அழைத்த போது அவர் மறுத்துள்ளார்,உடனே சிம்பு தன்னுடைய இன்னொரு படமான STRR 51 படத்தில் கேட்ட போதும் கால் ஷூட் பிரச்னையை காரணம் சொல்லி மறுத்துள்ளார்,இதனால் கடும் அப்சட்டில் இருந்த சிம்பு ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது இந்த வாய்ப்பை இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கார் தட்டி பறித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஆல்பம் பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தன,ஆர் ஜே பாலாஜியின் படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது சிம்புவின் STR49 மற்றும் STR51 என இரண்டு படங்களில் இசை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,இதனால் இந்த வருடம் சாய் அபியங்காருக்கு சிறந்த வருடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • GV Prakash and Saindhavi Divorce ஜிவி பிரகாஷ் உடன் கள்ளக்காதலா? சைந்தவிக்கு ஸ்கெட்ச்? பிரபல நடிகை பகீர்!
  • Leave a Reply