அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதில் அமெரிக்காவில் மார்வெல் திரைப்படங்களில் பணியாற்றிய பல VFX கலைஞர்களை இருவரும் சந்தித்து இத்திரைப்படத்திற்கான பணிகளில் ஆயத்தமாகியுள்ளது தெரிய வருகிறது.
VFX தொழில்நுட்பம் மூலம் அல்லு அர்ஜுன் கதாபாத்திரத்தை வடிவமைக்க உள்ளதாகவும் இந்த வீடியோவின் மூலம் தெரிய வந்தது. இதன் மூலம் இத்திரைப்படம் ஒரு ஃபேண்டஸி திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் கருத்துகள் நிலவுகின்றன.
இவர்தான் இசையமைப்பாளரா?
இந்த நிலையில் அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளாராம்.
“கட்சி சேர”, “ஆச கூட” போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாய் அப்யங்கர் “பென்ஸ்”, “சூர்யா 45”, “பிஆர் 4” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனை தொடர்ந்து தற்போது அட்லீ-அல்லு அர்ஜுன் இணையும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.