16-வருஷ லவ்.. சிம்புவை ப்ரபோஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் தங்கை..!(வீடியோ)
Author: Vignesh27 December 2023, 6:00 pm
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிலம்பரசன். இவர் நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, 40 வயது ஆகியும் நடிகர் சிம்பு திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே உள்ளார். சினிமாவில் நுழைந்து நல்ல நல்ல படங்கள் நடித்துவந்த இவர் இடையில் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். இதனால், சரியாக படங்கள் நடிக்காமல் இருந்தார்.
இப்போது, தான் மீண்டும் உடல் எடையை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். பல காதல் கிசுகிசுகளில் தொடர்ந்து சிக்கி வரும் தமிழ் நடிகர் என்றால் சிம்புவை சொல்லலாம். படங்களை ஒரு இடைவேளைக்கு பிறகு திரும்பி அவர் தற்போது, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது படத்திற்காக தயாராகி வருகிறார். இப்போதும் சமூக வலைதளங்களில் எப்போது சிம்புவிற்கு கல்யாணம் என்ற பேச்சு அடிக்கடி எழுந்து வருகிறது. ஆனால் இதற்கு பதில் என்னவோ சிம்பு மற்றும் அவர் குடும்பத்தார் தான் கூற வேண்டும்.
இந்நிலையில், நடிகர் சிம்புவை தான் காதலிப்பதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஒருவரின் தங்கை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அந்த பேட்டி தற்போது ட்ரெண்டாகி வருகிறது. சின்னத்திரையில் நடித்துவரும் சாய் காயத்ரியின் தங்கைதான் மதுரா.
இருவரும் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். அவர் சிம்பு குறித்து அளித்துள்ள பேட்டியில், பள்ளியில் படிக்கும் போது தொலைக்காட்சியில் சிம்பு பாடலை பார்த்ததிலிருந்து சிம்பு மேல் தனக்கு ஒரு கிரஷ் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், அப்போதிலிருந்து சிம்புவை ஒருதலையாக காதலித்து வருவதாகவும், அவரை நேரில் பார்த்தால், உடனே ப்ரபோஸ் செய்து விடுவேன் என்று கூறி ப்ரபோஸ் செய்தும் மதுரா காட்டியுள்ளார்.