தேன்கூட தேச்சு பாத்துட்டேன் அது நடக்கல… சீக்ரெட்டை வெளியிட்ட சாய் பல்லவி..!

Author: Vignesh
23 September 2023, 6:00 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sai pallavi

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சாய்பல்லவியிடம் வீட்டில் அடிக்கடி நீங்கள் செய்யக்கூடிய ரகசியமான அழகு குறித்து ஏதாவது இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், முகத்திற்கு முல்தானிமட்டி போடுவதற்கு பதிலாக, மஞ்சள் தடவிக் கொள்வேன். அவ்வப்போது, முகத்தில் பருக்கள் வந்தால் அந்த இடத்தில் மஞ்சள் வைப்பேன். அதை தாண்டி தயிர் தடவி முகத்தில் தேய்த்து விடுவேன்.

SAipallavi-Updatenews360 (2)

அதையும் தாண்டி தேன் கொண்டு முகத்தை தேய்த்து விடுவேன் என்று கூறினார். இதனை தொடர்ந்து தேன் தடவினால் முடி வெள்ளை முடி ஆகிவிடும் என்று கூறுவார்களே உங்களுக்கு அப்படி ஏதும் நடக்கவில்லையா என்ற கேள்விக்கு பதில், அளித்த அவர் இதுவரை எனக்கு அந்த மாதிரி வெள்ளை முடி எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

  • Salman Khan Net Worth Releasedதலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
  • Views: - 1071

    5

    2