நீங்க பண்ணது பெரிய தப்பு… ” அமரன்” படத்திற்கு சாய் பல்லவி வாங்கிய சம்பளம்?

Author:
29 October 2024, 5:03 pm

தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகையாக இருந்து வரும் நடிகை சாய் பல்லவி முதன் முதலில் மலையாள சினிமாவில் பிரேமம் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே ஏகோபித்த வரவேற்பை பெற்றார் .

மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த கதாபாத்திரம் அவரை உச்சத்தில் கொண்டு போய் உட்கார வைத்தது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இருந்தும் அவருக்கு வாய்ப்புகள் தேடி சென்றது .

sai pallavi

இதனிடையே தமிழில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் முகுந்தின் மனைவியான இந்து ரெபேக்கா வர்க்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார் .

இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி மற்றும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பூவன் அரோரா, ராகுல் போர்ட், ஸ்ரீகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் நடிகர் கமலஹாசனின் ராஜ் ஃபிலிம் திருமணம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது .

இசையமைப்பாளர் ஜி பி பிரகாஷ் குமார் தான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற தீபாவளி தினத்தன்று அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படியாக நடிகை சாய் பல்லவி அமரன் திரைப்படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

sai pallavi

அதன்படி சாய் பல்லவி அமரன் திரைப்படத்திற்கு நடிக்க ரூபாய் மூன்று கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நீங்கள் இந்த திரைப்படத்திற்காக சம்பளமே வாங்காமல் கூட நடித்திருக்கலாம். நம் நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் உயிர் தியாகம் செய்தவரின் மனைவியாக நடிக்க ஊதியம் வாங்காமல் நடித்திருந்தால்
அது சிறந்த நாட்டு பற்றாக இருந்திருக்கும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

  • suresh gopi name removed from empuraan title card and cuts in 24 places சுரேஷ் கோபியின் பெயர் நீக்கம், 24 கட்… எம்புரான் மறு சென்சாரில் திடீர் மாற்றம்…