சட்டப்படி வழக்கை சந்திக்க தயாரா இருங்க… ஊடகங்களுக்கு சாய் பல்லவி எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2024, 10:48 am
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக உள்ளவர் சாய் பல்லவி. பல படங்களில் கதைக்கு, திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் இவர் இதுவரை கவர்ச்சி துளிகூட காட்டியதில்லை.
இந்த நிலையில் முதன்முறையாக பாலிவுட்டில் சாய் பல்லவி நடிக்க உள்ளார். ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்கிறார். இந்த படம் பான் இந்தியா படமாக உருவாகிறது.
ஊடகங்களுக்கு சாய் பல்லவி எச்சரிக்கை
இப்படி இருக்க சாய் பல்லவி குறித்து சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. ராமாயணம் திரைப்படத்தில் சீதையாக நடிக்கும் காரணமாக, சாய் பல்லவி அசைவ உணவை முழுமையாக நிறுத்தி சைவ உணவுக்குச் சென்றுவிட்டார் என்று ஒரு வதந்தி பரவியது.
இதையும் படியுங்க: விவாகரத்து அறிவித்த பிரபல இயக்குனர்.. ரஜினி பிறந்தநாளில் அதிர்ச்சி!
மேலும், வெளியூர் சென்றாலும், அவருடன் சமையற்காரரை அழைத்துச் செல்வதாகவும், ஹோட்டல்களில் உணவருந்துவதில்லை எனவும் கூறப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள், “சாய் பல்லவி இப்படி மாறிட்டாங்களே!” என பேச ஆரம்பித்தனர்.
இந்நிலையில், சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் குறிப்பிட்டது : “வதந்திகள் மற்றும் பொய்களைக் கவனித்தபோதெல்லாம் நான் பெரும்பாலும் அமைதியாகவே இருந்தேன். உண்மை எது என்பதை கடவுள் அறிவார்.
ஆக்ஷன் எடுக்க தயங்க மாட்டேன்
ஆனால், இந்த வதந்திகள் தொடர்ந்து பரவுவது வேதனையானது. எனவே, இப்போது எதிர்வினையாற்றும் நேரம் வந்துவிட்டது. குறிப்பாக, எனது படங்கள் வெளியீட்டுக்கு முன்போ, முக்கிய அறிவிப்புகளின் போது இத்தகைய தகவல்கள் பரவுகின்றன.
அடுத்த முறையிலிருந்து, இத்தகைய வதந்திகள் மீண்டும் ஏற்பட்டால், நான் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன்” என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.