ஸ்லீவ்லெஸ்-க்கும் NO “சாய் பல்லவி தான் ரியல் ஹீரோயின்” –பிரபல இயக்குநர் வைரல் பேச்சு..!

Author: Selvan
3 February 2025, 6:18 pm

‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் சாய் பல்லவி நடிக்காதற்கு காரணம் இது தான்

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார்.அதன் பின்பு பல பட வாய்ப்புகள் வந்தாலும் குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

Sai Pallavi on Arjun Reddy movie offer

கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது.இவர் உச்ச நடிகையாக இருந்தாலும் இவர் நடிக்கின்ற படத்தில் எந்த ஒரு கவர்ச்சியும் காட்டாமலும்,எந்த ஒரு கிசுகிசுப்பில் சிக்காமலும் நடித்து வருகிறார்.வருகின்ற பெப்ரவரி 7 ஆம் தேதி இவருடைய நடிப்பில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் தண்டேல்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நாக சைதன்யா நடித்துள்ளார்.படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.

இதையும் படியுங்க: நான் ‘திமிரு’ பிடிச்சவன் தான்…இசையை எவன் சொல்லி கொடுத்தான்…சீறிய இளையராஜா..!

அப்போது இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா சாய் பல்லவியை பற்றி பேசியுள்ளார்.அதாவது 2017 ஆம் ஆண்டு விஜய் தேவர் கொண்டாவை வைத்து அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கினார்.அப்போது படத்தில் ஹீரோயினாக நடிகை சாய் பல்லவியை முயற்சி செய்துள்ளார்.அப்போது அவரிடம் ஒரு மேனேஜர் இந்த கதையில் அவர் நடிக்கவே மாட்டார்,அவர் ஸ்லீவ்லெஸ் கூட அணியமாட்டார் என்று தெரிவித்துள்ளதாக கூறியிருப்பார்.

மேலும் பல நடிகைகள் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரும் போது தனிப்பட்ட முறையிலும் அவர்கள் மாறுவார்கள்,ஆனால் கடந்த 10 வருடமாக சாய் பல்லவி ஆரம்பத்தில் எப்படி இருந்தாரோ,அதே மாதிரி தான் இப்பவும் நடிக்கின்றார்,அவருக்கு ஏதுவாக கதைகள் வந்தால் மட்டும் தேர்ந்தெடுத்து,அதில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் என்று சந்தீப் ரெட்டி வங்கா பாராட்டியிருப்பார்.

  • Vidaa Muyarchi making video மிரள வைக்கும் ஆக்ஷன்…நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்…’விடாமுயற்சி’மேங்கிங் வீடியோ ரீலிஸ்…!
  • Leave a Reply