தங்கச்சி கல்யாணத்துல குதூகலமா குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி – வீடியோ!

Author:
9 September 2024, 1:41 pm

தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த இளவட்ட ரசிகர்களின் கவனத்தையும் முதல் படமே ஈர்த்தார்.

sai pallavi

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அவருக்கு அமைந்ததை அடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் கரு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார் .

அந்த திரைப்படத்திற்கு முன்னதாக தாம் தூம், கஸ்தூரிமான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குறிப்பிடப்படாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், மாரி 2 திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு மிகச் சிறப்பாக ஆட்டம் போட்டு இருப்பார் நடிகை சாய் பல்லவி .

sai pallavi

தொடர்ந்து என் ஜி கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சாய் பல்லவி தனது தங்கையின் திருமண நிகழ்ச்சியில் குடும்ப உறவு பெண்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

  • Keerthy Suresh Bollywood debut கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்…வாரி கொடுத்த அட்லீ…முதல் பாலிவுட்டில் இத்தனை கோடி சம்பளமா..!
  • Views: - 281

    0

    0