இரவுப் பாட்டில் குத்தாட்டம் போட்ட சாய்பல்லவி.. அதுவும் எந்த நடிகருடன் தெரியுமா..(வீடியோ)

Author: Vignesh
9 March 2024, 6:36 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

SAipallavi-Updatenews360 (2)

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில், தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 தெலுங்கில் நாகசைதன்யாவுடன், தன்டேல் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஜீனத் காணுடன் நடிக்கும் படத்திற்காக வெளிநாடு ஷூட்டிங்கில் இருந்து வரும் சாய்பல்லவி. சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஷூட்டிங் முடித்துள்ளனர். அதை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இரவு மதுபார்ட்டி வைத்து ஆட்டம் போட்டிருக்கிறார்கள். அந்த பாட்டியில் நடிகை சாய் பல்லவி வெறித்தனமாக ஆட்டம் போட்டு உள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!