நடிகை சாய் பல்லவிக்கு அடி உதை… அந்த வேலையை செய்து சிக்கிக்கொண்ட பகீர் சம்பவம்..!
Author: Vignesh18 May 2023, 12:45 pm
நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு. இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி.
அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார். இந்நிலையில், சாய் பல்லவி நிஜ வாழ்க்கையில் எந்த நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டது இல்லை.
இப்படி ஒரு நிலையில் சாய் பல்லவி குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சாய் பல்லவி பள்ளி பருவத்தில் இருக்கும் போது சக மாணவனுக்கு லவ் லெட்டர் எழுதியதாகவும், ஆனால் அதை கொடுப்பதற்கு முன்பே சாய் பல்லவியின் அம்மா படித்துவிட்டு, பின்னர் அவரது அம்மா சாய் பல்லவியை அடி அடி அடித்துவிட்டாராம். இது தான் சாய் பல்லவியின் முதல் காதல் என்று முணுமுணுக்க படுகிறது.