அந்த நடிகைக்கு பதிலா சாய் பல்லவிக்கு விருது கொடுக்கலாம்.. கொந்தளுக்கும் ரசிகர்கள்..!
Author: Vignesh17 August 2024, 2:39 pm
ஒவ்வொரு வருடமும் தேசிய திரைப்பட விருதுகளை இந்திய அரசு வழங்கும் வருகின்றது. அந்த வகையில், கடந்த 2002 ஆம் ஆண்டிற்கான எழுபதாவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பொன்னியின் செல்வன் படத்திற்கு நான்கு விருதுகளும் திருச்சிற்றம்பலம் படத்திற்கு இரண்டு விருதுகளும் கிடைத்திருக்கிறது.
அதில், சிறந்த நடிகைக்கான விருதினை நித்யா மேனன் மானசி பரேக்கும் வானத்தை பறக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரை கொடுத்து கார்க்கி படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவிக்கு ஏன் தேசிய விருது வழங்கவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
மக்கள் மத்தியில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்ற கார்க்கி படத்தில் நடித்த சாய் பல்லவிக்கு, இந்த விருது சரியாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.