சாய் பல்லவிக்கு திடீர் உடல்நலக்குறைவு : சினிமாவை விட்டு விலக முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan3 February 2025, 11:58 am
கடின உழைப்பால் சினிமாவில் நுழைந்து நல்ல பெயர் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. கதைக்காக மட்டுமே நடித்து வரும் சாய் பல்லவி, கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டிய அவசியமில்லை என கூறி அதிரடி காட்டியவர்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையானார். சமீபத்தில் வெளியான அமரன், புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.
தற்போது நாக சைதன்யாவுடன் இவர் நடித்த படம் தண்டல். வரும் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.இதனால் பட பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதையும் படியுங்க : அஜித் குமாருக்கு ‘பாராட்டு விழா’ நடந்த வேண்டும்..பிரபல காமெடி நடிகர் அதிரடி பேச்சு..!
சென்னையில் நேற்று நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆனால் சாய் பல்லவி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியலும் சாய் பல்லவி பங்கேற்கவில்லை. இது குறித்து அப்படத்தின் இயக்குநர் சந்து மொண்டேட்டி கூறும் போது, சாய் பல்லவிக்கு உடல்நிலை சரியில்லை.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொணடார். தற்போது ஓய்வு தேவை என்பதால் வரமுடியவில்லை என கூறியுள்ளார். மருத்துவர் ஓய்வு எடுக்க கூறியதால் சிறிது காலம் அவர் நடிப்புக்கு முழுக்கு போடலாம் என தகவல் கசிந்துள்ளது.