என்னமா சொல்லுற.. 10 வருஷ LOVE ஆ.. சாய் பல்லவியின் காதலர் இவர்தானாம்..!
Author: Vignesh10 July 2024, 9:22 am
நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: இதை எப்படி சொல்றதுன்னு தெரியல… Cooku with Comali-யை விட்டு விலகிய வெங்கடேஷ் பட் வெளியிட்ட Video..!(Video)
ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு. இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.
மேலும் படிக்க: வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம்.. பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய சகிலா..! (Video)
இந்நிலையில், இவர் நடிப்பில் தமிழில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய்பல்லவி பாலிவுட் பக்கம் சென்று விட்டார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் தற்போது சீதையாக நடித்து வருகிறார். இதை தாண்டி சாய் பல்லவி அஜித் மற்றும் விஜய்யுடன் இணைந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், அதை அவர் மறுத்து விட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில், நடிகை சாய்பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவை அனைத்துமே வதந்திதான் எதுவுமே உண்மையில்லை என தெளிவாக கூறி இருந்தார்.
மேலும் படிக்க: போட்டி போட்டு அஜித் படத்தின்- OTT ரைட்ஸை தட்டித் தூக்கிய நிறுவனம்.. தல ஃபேன்ஸ் ரெடியா இருங்க..!
இந்நிலையில், சாய்பல்லவி தனது காதல் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசி உள்ளார். அதில், நான் பத்து வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன். அபிமன்யு என்ற கதாபாத்திரத்தை தான் காதலித்து வருகிறேன். மகாபாரதம் கதையில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யு தான் அவர் என சாய் பல்லவி தெரிவித்திருக்கிறார்.