அந்த படத்தின் முதல் சாய்ஸ் சாய் பல்லவி இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!

Author: Vignesh
11 July 2024, 5:48 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

saipallavi

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்த நிலையில், பிரேமம் படம் குறித்த ஒரு சுவாரசிய தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, இந்த படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது சாய்பல்லவி கிடையாதாம். பிரபல நடிகை அசின் தான் இப்படத்தில் முதல் முதலில் மலர் டீச்சர் ஆக நடிப்பதாக இருந்ததாம். இது குறித்து, பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் பிரேமம் படத்தில் வரும் மலர் டீச்சர் கதாபாத்திரம் மட்டஞ்சேரியை சேர்ந்தவராக முதலில் எழுதினேன். அதற்காக முதலில் இப்படத்தில் அசினை நடிக்க வைக்க முயற்சிகள் செய்தேன். ஆனால், மலர் கதாபாத்திரம் தமிழாக மாறிய பின்னர் சாய்பல்லவியை நடிக்க வைத்தோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 190

    0

    0