விபூதியை விரும்பி சாப்பிடும் சூர்யா பட நடிகை: டேஸ்ட் சூப்பரா இருக்காம்..!

Author: Vignesh
6 September 2023, 12:00 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில், ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சாய்பல்லவி தனக்கு விபூதி சாப்பிட பிடிக்கும் என்றும், என் ஹேண்ட் பேக்கில் எப்பொழுதும் விபூதியை வைத்திருப்பேன். எனக்கு விபூதியின் சுவை பிடித்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட சிலர் விபூதியை போய் யாராவது சாப்பிடுவாங்களா என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, சிலர் சாய்பல்லவி சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. விபூதி நன்றாக தான் இருக்கும் என்றும், நாங்களும் சாப்பிடுவோம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 396

    1

    1