செம சிம்பிளாக ரகசிய திருமணம் செய்த சாய் பல்லவி?.. வைரலாகும் புகைப்படம்..!

Author: Vignesh
20 September 2023, 1:53 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sai pallavi

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில், தற்போது பட வாய்ப்பு குறையவே அடக்கமான பெண்ணாக வளம் வந்த சாய்பல்லவி. தற்போது, மாடன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.

sai pallavi - updatenews360 j

இந்நிலையில், நடிகை சாய் பல்லவி இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியானது. ஆனால், அது சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் பூஜை என்றும், அப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!