இதெல்லாம் என்கிட்ட ஆகாது கிளம்பு… லியோ பட வாய்ப்பை தூக்கியெறிந்த சாய்பல்லவி!
Author: Shree14 March 2023, 7:57 pm
மலர் டீச்சராக ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை சாய்ப்பல்லவி. 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த அப்படம் அவரது கெரியரில் மைல் கல்லாக அமைந்தது.

அதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தாம் தூம் படத்தில் ஒரு சியா ரோலில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஹீரோயினாக கரு , மாரி 2 , என் ஜி கே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திற்கு முதலில் சாய்ப்பல்லவியை தான் தேர்வு செய்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அவர் ரோல் கதைக்கு அழுத்தமில்லாத காரணத்தால் வேண்டாம் என கூறியுள்ளார்.
பின்னர், இது விஜய் படம் மேடம் கதைக்கு நீங்க இம்பார்டென்ட் இல்லனாலும் ஹீரோயின் நீங்கதான் அதனால் மவுஸ் கிடைக்கும் என கூறியுள்ளனர். ஆனால், சாய் பல்லவி விஜய்யா இருந்தாலும் எனக்கு முக்கியமில்லாத கேரக்டரில் நான் நடிக்க மாட்டேன் . நீங்கள் வேறு யாரையாவது சென்று அணுகுங்கள் என கூறிவிட்டாராம். அதன் பின்னர் தான் திரிஷாவுக்கு விஜய் மீது க்ரஷ் இருப்பதால் ஒரு வார்த்தை பேசாமல் உடனே ஓகே சொல்லிவிட்டாராம்.