அய்யா சாமி.. என்னால முடியாதுப்பா.. விஜய்க்கு ஜோடியாக கிடைத்த வாய்ப்பு No சொன்ன சாய் பல்லவி..!

Author: Vignesh
22 May 2023, 6:45 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

sai pallavi

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு. இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி.

அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார். இந்நிலையில், சாய் பல்லவி நிஜ வாழ்க்கையில் எந்த நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டது இல்லை.

இப்படி ஒரு நிலையில் சாய் பல்லவி குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இந்நிலையில் சாய் பல்லவி விஜய் தேவார கொண்டாவுடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளதாகவும், விஜய் தேவரகொண்டா படத்தில் முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் போன்றவற்றை இருக்கும் என்பதால் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

vijay devarakonda-updatenews360
  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 705

    4

    3