மெகா பட்ஜெட் படங்களை ரிஜெக்ட் செய்த சாய் பல்லவி – அத்தனை படமும் அட்டர் பிளாப் தான்!

Author: Rajesh
10 February 2024, 12:47 pm

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் சாய்பல்லவியின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார். அந்தவகையில் இவர் ரிஜெக்ட் செய்த மெகா பட்ஜெட் படங்களையும் அதற்கான காரணத்தை பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

வலிமை:

ajith-updatenews360

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்து வெளியான திரைப்படம் வலிமை. இப்படத்தின் அஜித்திற்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது நடிகை சாய்பல்லவி தானாம். படத்தின் கதை கேட்டதும் தனக்கான ரோலில் ஸ்கோப் இல்லை என கூறி அஜித் படமாக இருந்தாலும் எனது ரோல் பேசப்படாதது போல் இருப்பதால் வேண்டாம் என முகத்திற்கு நேராகவே கூறிவிட்டாராம்.

டியர் காம்ரேட்:

விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா நடித்து வெளியான காதல் திரைப்படம் டியர் காம்ரேட். இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. இப்படத்தின் இடம்பெற்ற ரொமான்ஸ் காட்சிகள் விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா ஜோடியை நிஜ காதலர்களாக்கியது. இப்படத்தின் வாய்ப்பு அப்போது பிரேமம் ஹீரோயின் என பிரபலமாக பேசப்பட்ட சாய்ப்பல்லவிக்கு தான் கிடைத்ததாம். ஆனால், அப்படத்தில் லிப்லாக் காட்சி இருப்பதால் ஒரே வார்த்தை முடியாது வேற ஆள பாருங்க என கறாராக கூறிவிட்டாராம் சாய் பல்லவி.

சந்திரமுகி 2:

மாபெரும் வெற்றி திரைப்படம் என்ற ப்ராண்டுடன் வெளியான படம் தான் சந்திரமுகி 2. பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இப்படத்தில் கங்கனா ரனாவத் ரோலில் நடிக்கும் வாய்ப்பு முதலில் சாய் பல்லவிக்கு தான் கிடைத்ததாம். ஆனால் , அந்த படத்தின் கதையை கேட்டதும் மொக்கையாக இருந்ததால் முன்னரே உஷாராக ஒதுங்கிவிட்டாராம்.

போலோ ஷங்கர்:

சிரஞ்சீவி நடிப்பில் ஓவர் பந்தா காட்டி விளம்பரம் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் போலோ ஷங்கர். இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கை ரோலில் நடிக்க சாய்பல்லவியிடம் கேட்டுள்ளனர் படக்குழு. ஆனால் கதை ஓர்த்தாக இல்லாததால் சாய்ப்பல்லவி ரிஜெக்ட் செய்ய அதில் கீர்த்தி சுரேஷ் நடித்து மொக்கை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோ:

விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படத்தில் ஹீரோயின் வாய்ப்புக்கும் முதலில் நடிகை சாய்பல்லவிக்கு தான் வந்ததாம். ஆனால், அப்படத்தில் லிப் லாக் காட்சி இருந்ததால் சாய்பல்லவி நோ சொல்ல பின்னர் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டார் திரிஷா. சாய்பல்லவி ரிஜெக்ட் செய்ததில் பெரும்பாலும் பிளாப் திரைப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?