விக்ரமுக்கு NO சொன்ன சாய் பல்லவி காரணம் இது தானா..!
தென்னிந்திய சினிமாவில் தற்போது உச்ச நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி.இவருடைய நடிப்பில் கடந்த வருடம் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றன.
இந்த நிலையில் யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வின் தற்போது விக்ரமை வைத்து,தன்னுடைய அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.இப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில்,விக்ரமின் வீர தீர சூரன் ரிலீசிற்கு பிறகு இப்படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளார்.
அதனால் படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவியை படக்குழு அணுகிய போது விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க அவர் மறுத்த்துள்ளார்.விக்ரம் சீனியர் நடிகர் என்பதால் வயது காரணமாக அவர் நடிக்க ஒத்துக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்படுகிறது.இன்னொரு புறம் சாய் பல்லவி எப்போதும் குறைந்த படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால் கால் ஷூட் பிரச்சனையும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்க: இதுக்குமேல என்ன வேணும்…விடாமுயற்சி COMING SOON…துபாயில் அஜித் சொன்ன தகவலால் வைரலாகும் வீடியோ..!
இதனால் படக்குழு அடுத்ததாக பிரியங்கா மோகன் மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.இதனால் விக்ரமின் அடுத்த பட ஹீரோயினியை விரைவில் படக்குழு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.