தனுஷ் கூட அது முடியாது? ஏன் என்ன டார்ச்சர் பண்றீங்க? கதறிய சாய் பல்லவி – அட்ஜெட் பண்ண கொடுமை!

Author: Shree
5 May 2023, 8:28 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் மாரி 2 படத்தில் ரௌடி பேபி பாடலுக்கு நடனமாடிய அனுபவம் குறித்து பேசியுள்ள சாய்பல்லவி, நான் ரிகர்சலில் ஆடியே டயாட் ஆகிவிட்டேன். அந்த பாடலின் choreographer பிரபு தேவா மாஸ்டர் என்னை இன்னும் நல்லா ஆடு என கூறிக்கொண்டே இருந்தார். சத்தியமா என்னால் அதற்கு எனர்ஜி உடன் ஆடமுடியவில.

பிரபு தேவா மாஸ்டர்…..தனுஷ் எப்படி ஆடுறாரு பாரு பல்லவி அவர் மாதிரி ஆடு என கூறினார். நான் என்ன மாதிரி தான் ஆடமுடியும். அவரை மாதிரி ஆடமுடியாதுன்னு கோபத்தில் கத்தி அழுத்துவிட்டேன். பின்னர் பிரபு தேவா எனக்கு எடுத்துச்சொல்லி அவருக்கு தேவைப்படுவது போல் ஆடவைத்து காட்சிகளை எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் பார்த்ததும் பிரம்மாதமாக இருந்தது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன் வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

https://www.facebook.com/watch/?v=243907514975588&ref=sharing

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 760

    0

    3