அக்காவை விட்டுடுங்க ப்ளீஸ்… தயாரிப்பாளரிடம் கதறிய சாய் பல்லவி தங்கை!

Author: Shree
16 October 2023, 2:33 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் தற்போது தகவல் என்னவென்றால் ஷியாம் சிங்கா ராய் தன்னுடைய காட்சிகள் அனைத்தும் இரவு நேரத்தில் தான் படமாக்கப்பட்டது. எனக்கு பகல் நேரங்களில் தூங்கும் பழக்கமே இல்லை. இரவு நேரத்தில் தான் தூங்குவேன். அதனால் படப்பிடிப்பில் தூக்கமில்லாமல் 30 நாட்கள் கஷ்டப்பட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் சுத்தமாக முடியவில்லை. இதை இயக்குனரிடம் சொல்ல தயங்கினேன்.

வீட்டிற்கு வந்து என் தங்கையிடம் கூறி அழுதேன். அவள் எனக்கு தெரியாமல் ஷியாம் சிங்கா ராய் படத்தின் தயாரிப்பாளரை சந்தித்து என் அக்காவால் இரவு நேர ஷூட்ங்கில் கலந்துக்கொள்ள மிகவும் சிரமமாக இருக்கிறது. அவ கடந்த 30 நாட்களாக தூங்கவே இல்லை. அவளுக்கு விடுமுறை கொடுங்கள் என கேட்டுள்ளார். பின்னர் தயாரிப்பாளர் சரி அவரை ஒரு 10 நாட்களுக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்கள். அதன் பின்னர் அவரது காட்சிகளை படமாக்கி கொள்கிறோம் என சொன்னார்களாம். பின்னர் 10 நாட்கள் ஓய்வெடுத்த பின்னரே சாய் பல்லவி அப்படத்தின் ஷூட்டிங்கில் கலந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 433

    0

    0