சாய் பல்லவி வீட்டில் திருமண கொண்டாட்டம்.. சத்தமில்லாமல் நடந்துள்ள நிச்சயதார்த்தம்..!(வீடியோ)

Author: Vignesh
22 January 2024, 2:32 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில், தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 தெலுங்கில் நாகசைதன்யாவுடன், தன்டேல் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

sai-pallavi

இவரின் தங்கை பூஜா கண்ணனும் படத்தில் நடித்துள்ளார். அதாவது, சமுத்திரகனியுடன் இவர் சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தனது காதலனை தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், இந்த அழகானவர் தான் எனக்கு உண்மையான அன்பையும் பொருமையையும், காதலிக்க கற்றுக் கொடுத்தது.

sai-pallavi

இது வினித் என் சூரிய ஒளி சமீப காலம் வரை எனது குற்றத்தில் எனது துணை இப்போது, அவர் என் வாழ்க்கை துணையாக இருக்கப் போகிறார். நான் உன்னை காதலிக்கிறேன் என் துணை என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில், பூஜா கண்ணனுக்கும் அவரது காதலர் வினித் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும், சாய்பல்லவி பூஜா கண்ணன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த சாய்பல்லவியின் ரசிகர்கள் பலரும் அக்காவே கல்யாணம் செய்யாமல் இருக்கிறார்கள். அதுக்குள்ள உங்களுக்கு கல்யாணம் கேக்குதா ? என்று கண்டமேனிக்கு விமர்சித்து வருகின்றனர். மேலும், ஒரு சிலரோ இது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை இதில் மற்றவர்கள் தலையிடுவது சரியாக இருக்காது என்று சாய் பல்லவியின் தங்கைக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 352

    0

    0