நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.
இந்நிலையில், தற்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 தெலுங்கில் நாகசைதன்யாவுடன், தன்டேல் என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவரின் தங்கை பூஜா கண்ணனும் படத்தில் நடித்துள்ளார். அதாவது, சமுத்திரகனியுடன் இவர் சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்த பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தனது காதலனை தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், இந்த அழகானவர் தான் எனக்கு உண்மையான அன்பையும் பொருமையையும், காதலிக்க கற்றுக் கொடுத்தது.
இது வினித் என் சூரிய ஒளி சமீப காலம் வரை எனது குற்றத்தில் எனது துணை இப்போது, அவர் என் வாழ்க்கை துணையாக இருக்கப் போகிறார். நான் உன்னை காதலிக்கிறேன் என் துணை என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், பூஜா கண்ணனுக்கும் அவரது காதலர் வினித் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும், சாய்பல்லவி பூஜா கண்ணன் உள்ளிட்ட அவரது உறவினர்கள் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், தங்கைக்கு திருமணமாக இருக்கும் இந்த சமயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சாய் பல்லவி குறித்து பேசப்பட்ட செய்தி தற்போது மீண்டும் வைரலாக வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சாய் பல்லவி திருமணம் குறித்து வந்த செய்தியில் என்னுடைய 23வயதில் திருமணம் செய்து கொண்டு 30 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்பதை என்னுடைய ஆசையாக இருந்தது.
பின்னர் அந்த முடிவுகளை நான் மாற்றிவிட்டேன். எங்கள் வீட்டில் சில முக்கியப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய பொறுப்பு இருந்தது. ஒரு நடிகையாக நல்ல பெயர் கிடைத்துவிட்டதும். திருமணத்தை தள்ளிவைத்து விட்டேன் என்று சாய் பல்லவி தெரிவித்து இருந்தார். மேலும், திருமணம் ஆகிவிட்டால் பெற்றோரை விட்டு பிரிந்து கணவர் வீட்டிற்கு செல்ல நேரிடும் என சாய்பல்லவி கருதுவதாக தகவல்கள் வெளியானது. அதனால், அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தான் பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.