அந்த நடிகர் கூட அத பண்ணி அழுதுட்டேன்…. வலிகள் நிறைந்தது சினிமா வாழ்க்கை – சாய்பல்லவி வேதனை!
Author: Shree12 August 2023, 2:27 pm
நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏதாவது ஒரு காட்சிக்கு ரொம்ப மெனக்கட்டு நடித்து கஷ்டப்பட அனுபவம் இருக்கா? என கேட்டதற்கு. ஆம், நான் நானியுடன் நடித்த MCA படத்தில் இடம்பெற்ற எவண்டோய் நானி காரு பாடலுக்கு பின்பக்கமாக முதுகை வளைத்து நடனமாடிய அந்த ஸ்டெப் ஆட ரொம்ப கஷ்டப்பட்டேன். பாரிஸில் எடுக்கப்பட்ட அந்த ஷூட்டிங்கிற்கு என் தங்கை கூட வந்திருந்தால் அப்போது அவள் பாரிஸ் சுற்றி பார்த்து போட்டோ எடுத்து அனுப்புவாள் நான் இங்க இந்த டான்ஸ் ஆட ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பேன். ஒரு 10…20 டைம் அந்த ஸ்டெப் போட்டு ரொம்ப வலி வந்து அழுதுட்டேன் என கூறி வேதனையை பகிர்ந்துள்ளார்.