தென்னிந்த சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த இளவட்ட ரசிகர்களின் கவனத்தையும் முதல் படமே ஈர்த்தார்.
அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அவருக்கு அமைந்ததை அடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து திரைப்படவாய்ப்புகள் குவிய தொடங்கியது. மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் கரு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார்.
அந்த திரைப்படத்திற்கு முன்னதாக தாம் தூம், கஸ்தூரிமான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் குறிப்பிடப்படாத கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், மாரி 2 திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த திரைப்படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு மிகச் சிறப்பாக ஆட்டம் போட்டு இருப்பார் நடிகை சாய் பல்லவி .
தொடர்ந்து என் ஜி கே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சாய் பல்லவி நடிகை சாய் பல்லவியின் தந்தை சாய்பல்லவியிடம் நீ ஒரு படுகர் இனத்தை சேர்ந்தவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறினார் .
இதுகுறித்து பேசியிருக்கும் அவர்….. எனது கிராமத்தில் படுகர் இனம் இல்லாமல் வேறொருவரை திருமணம் செய்து கொண்டால் நல்லது கெட்டது எதுக்குமே அழைக்க மாட்டார்கள். நான் சினிமாவுக்கு வந்த சில காலம் என்னுடைய அப்பா என்னிடம் வந்தார்.
இதையும் படியுங்கள்: அந்த பிரச்சனையில் தலையிடாதே… ஜோதிகா சொல்லிட்டே இருப்பாங்க – சூர்யா Open டாக்!
அப்போது நீ படுகர் இனத்தில் இருப்பவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது நம் கலாச்சாரத்தை பற்றியது என எடுத்து கூறினார். ஆனால் நான் அவரிடம் உங்கள் கலாச்சாரத்துக்காக நீங்கள் விரும்புவதை எல்லாம் என்னால் செய்ய முடியாது. அது ரொம்பவே தவறு என்று எடுத்து கூறினேன் என பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். முன்னதாக சாய் பல்லவியின் தங்கைக்கு அவரது காதலனுடன் அண்மையில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.