சாய் பல்லவிக்கு வந்த சோதனை…ஓடிடி-யில் பரிதவிக்கும் “தண்டேல்”.!

Author: Selvan
13 March 2025, 4:53 pm

OTT-யில் எடுபடாத தண்டேல்

கோலிவுட்டைத் தாண்டி தற்போது பான் இந்திய கதாநாயகியாக வலம் வரும் சாய் பல்லவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தண்டேல்.டோலிவுட் இயக்குநர் சந்தூ மொண்டேட்டி இயக்கிய இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதையும் படியுங்க: ரஜினிக்கு மனைவியா நடிக்க வாங்க…பிரபல நடிகையிடம் மர்ம நபர் மோசடி.!

பிரபல தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாசு இப்படத்தை தயாரித்தார்,காதல்,ஆக்ஷன் மற்றும் உணர்வுகளுடன் கூடிய இப்படம் குறுகிய நாட்களில் அதிகம் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நாக சைதன்யா,சாய் பல்லவி,பிரகாஷ் பொலவாடி,திவ்யா பில்லி,கருணாகரன்,ஸரன்தீப்,கல்ப லதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

2018ம் ஆண்டு ஆந்திராவில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.ஒரு மீனவ கிராமத்தில் வசிக்கும் போராளி ஒருவர் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் போது,பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்.இதைத் தொடர்ந்து அவர் செய்யும் போராட்டங்கள் மற்றும் சவால்கள் இப்படத்தின் முக்கிய புள்ளியாக அமைகிறது.

தமிழ்,தெலுங்கு,மலையாளம்,இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் 2025 பிப்ரவரி 7ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம் திரையரங்குகளில் ரூ.115 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து சாதனை படைத்தது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தை விட கூட இந்த படத்துக்கு தெலுங்கு மாநிலங்களில் அதிக வரவேற்பு கிடைத்தது என்று கூறப்படுகிறது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இப்படம் 2025 மார்ச் 7ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியானது.ஆனால்,எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெறவில்லை.

சில ரசிகர்கள் படத்தின் திரைக்கதை மெதுவாக சென்றதாகவும்,ஓடிடிக்கு ஏற்ற மாதிரியான காட்சிகள் போதுமான அளவில் இல்லையெனவும் விமர்சித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் சிறிய ஏமாற்றத்தில் உள்ளனர்.

  • Sridej health update புஷ்பா-2 கூட்ட நெரிசலில் சிக்கிய சிறுவனின் தற்போதைய நிலை..மருத்துவர்கள் சொன்ன தகவல்.!
  • Leave a Reply