அப்படியே ஓடிப்போயிடு… இந்த பக்கமே வராதே – ரஜினி மகளை விரட்டியடித்த கோலிவுட்!
Author: Shree27 April 2023, 9:44 pm
பேராண்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. 5 பேர்களில் ஒருவராக நடித்து கவனிக்க வைத்தார். அதன்பின் அரவான் படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்து சிறந்த நடிப்புக்காக விருதினை வென்றார். அடுத்தடுத்து அவர் நடித்த பரதேசி கபாலி, போன்ற படங்கள் இவரை நல்ல நடிகையாக காட்டியது . இந்த 2 படத்தில் நடித்ததற்கு பிலிம்பேர் அவார்ட்டை வாங்கினார்.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டு ரஜினியுடன் இணைந்து கபாலி படத்தில் அவரது மகளாக நடித்து பட்டய கிளப்பினார். இந்த படத்திற்காக தனது தலைமுடியை பாய் கட் செய்துக்கொண்டு வித்தியாசமாய் தோன்றினார் நடிகை சாய் தன்ஷிகா. இருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அக்கட தேசத்து படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இதையடுத்து ஒரே அடியாக கோலிவுட் திரையுலம் அவரை ஒதுக்கிவிட்டது.