என்ன பொண்ணுடா.. விவாகரத்துக்கு பின் இப்படியொரு விஷயத்தை செய்த சைந்தவி..!

Author: Vignesh
20 July 2024, 9:16 am

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

GV Prakash - Updatenews360

மேலும் படிக்க: காஸ்ட்லி வில்லனான பகத் பாசில்… புஷ்பா 2 -வில் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?..

மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார். ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

gv prakash

மேலும் படிக்க: விதார்த், வாணி போஜனை கைது செய்ய வேண்டும்.. அந்த படத்தை தடை செய்ய வேண்டும்.. பரபரப்பு புகார்..!

இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். இந்நிலையில், தற்போது கூறவரும் விசயம் என்னவென்றால், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் சைந்தவி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிவி பிரகாஷ் உடனான பிரிவுக்கு முன்பாக ‘சைந்தவி பிரகாஷ்’ என்று இருந்தது. ஆனால், தற்போது அவர் ‘சைந்தவி என்று மாற்றி இருக்கிறார். இருப்பினும், சைந்தவியின் முன்னாள் கணவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சைந்தவி புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அதில், அவர் வெளியிட்ட புகைப்படத்தை ஜிவி பிரகாஷை பிரிந்தும் அவர் கட்டிய தாலிய கழட்டாமல் இருப்பதை ரசிகர்கள் கவனித்துள்ளனர். இதற்கு பலரும் சைந்தவியை பாராட்டி வருகிறார்கள்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 278

    0

    0