கரீனா கபூர் மகனை பார்த்துக்கொள்ள ரூ. 2.5 லட்சம் வாங்குகிறேனா? உண்மை உடைத்த ஆயம்மா!

Author:
30 July 2024, 9:56 am

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கரீனா கபூர். 2000 காலகட்டங்களில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். இவர் ஷாருக்கான் சல்மான்கான் உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களின் ஜோடி போட்டு நடித்து அங்கு ஸ்டார் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

மகாராஷ்டிராவை சொந்தவராக கொண்ட இவர் பிரபல நடிகரான சைப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக பார்க்கப்பட்டது. காரணம் விட நடிகை கரீனா கபூர் வயதில் மிகவும் இளையவர் கிட்டத்தட்ட 10 வயது மூத்தவர் சைப் அலி கான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கரீனா கபூர் மகன் தைமூரை கவனித்துக் ஆயா ஒருவரை பணியமர்த்தபட்டிருக்கிறார். அந்த ஆயாவிற்கு மாத சம்பளம் மட்டும் ரூ. 2.5 லட்சம் என தகவல் வெளியாகி சில மாதங்களுக்கு முன்னர் தீயாய் பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அந்த ஆயாம்மாவிடம் அவரது மாத சம்பளம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு உண்மையில் உடைத்திருக்கிறார்.

“2.5 லட்சமா…? உங்கள் வார்த்தை நிஜமாக வேண்டும் என நான் விரும்புகிறேன். இதெல்லாம் வெறும் வதந்தி தான் என கூறிய அவர், நான் சைப் அலி கான் – கரீனா வீட்டில் கடந்த 8 வருடமாக இருந்து வருகிறேன். அவர்களின் குழந்தைகள் உடன் தான் 24×7 இருக்கிறேன். அவர்கள் ஒருபோதும் என்னை வேறொருவர் போல நடத்தியது இல்லை. நாங்கள் சாப்பிடும் உணவை தான் அவர்களும் சாப்பிடுவார்கள். பணியார்களுக்கு தனி உணவு என அந்த வீட்டில் இல்லை. சில நாட்களில் சைப் அலி கான் சமைத்து எல்லோருக்கும் கொடுப்பார் என கூறி இருக்கிறார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 339

    0

    0