ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சைந்தவி?.. ஜீவனாம்சமாக கொட்டிக் கொடுத்த GV.. சர்ச்சையை கிளப்பும் பிரபலம்..!

Author: Vignesh
28 May 2024, 6:29 pm

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் தனது முழு திறமையை காட்டி நல்ல இசையை தொடர்ந்து கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயில், செல்பி, ஐயங்காரன் ஆகிய படங்களில் ஜிவி.பிரகாஷின் நடிப்பு நன்றாக இருந்தாலும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனிடையே, ஜி.வி.பிரகாஷ் சிறுவயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம் கொண்ட ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலை முதன்முதலாக பாடினார் அசத்தியது குறிப்பிடத்தக்கது.

g v prakash -updatenews360

மேலும் படிக்க: யாரையும் நம்பிறாதீங்க.. மருத்துவமனையில் இருந்து திடீர் வீடியோ வெளியிட்ட மதுரை முத்து மனைவி..!

மேலும், கடந்த 2006ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக கலக்கிய ஜி.வி.பிரகாஷ் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்தார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆதிக்கம் செலுத்தி வருடிகிறார். இவருக்கு படிப்படியாக நடிப்பின் மீது ஆர்வம் வந்த நிலையில், படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார், இன்னொரு பக்கம் இசையமைத்தும் வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் படிக்க: தம்பி ஓடாத நில்லு.. மகன்களுடன் கொஞ்சி விளையாடிய நயன்..!(Video)

இந்நிலையில், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் திருமணம் செய்துகொண்டு 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கின்றனர். அவர்கள் பிரிவதாக நேற்றில் இருந்தே செய்தி பரவி வந்தது. தற்போது, அதிகாரபூர்வமாக ஜி.வி.பிரகாஷ் சைந்தவி இருவரும் விவாகரத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

மேலும் படிக்க: நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!

இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிக்கையாளர் உமாபதி ஜிவி பிரகாஷ் விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், சைந்தவி போன்ற பெண்கள் ஒன்னுத்துக்கும் ஆக மாட்டாங்க, உங்க வளர்ச்சியை பேஸ் பண்ணி அவங்க வளர்ந்து கொண்டு கடைசில பிடிக்கல ஆரம்பத்தில் இருந்து அவரை பிடிக்கவில்லை. என்னுடைய வாழ்க்கை போச்சு, சுதந்திரம் போச்சுன்னு சொல்லுவாங்க… அன்னைக்கு அவன் பிரபலமாய் இருப்பான் அதை பயன்படுத்தி வாழ்ந்து விட்டு கடைசியில் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சொல்ல வேண்டியது.

gv prakash

சுதந்திரம் வேண்டும் என்றால் மற்றவர்கள் காசை பயன்படுத்தக் கூடாது. பிரபலங்களை திருமணம் செய்து கொண்டு நல்ல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு கடைசியில், கழட்டி விட்டு சென்று விடுவார்கள். சைந்தவி பல பேட்டிகளில் ஜிவி பிரகாஷ் பள்ளி பருவத்திலிருந்து காதலித்து வருகிறேன் என்று சொல்கிறார். ஆனால், அவரை பிரிந்து சென்ற பிறகு நிறைய காசுகளை வாங்கிவிட்டார். எவ்வளவோ சொத்துக்களை அடித்து விட்டு வந்தாச்சு இவ்வளவு நாள் வாழ்ந்துட்டாங்க.. அதற்காக, அவங்க நிறைந்த சொத்துக் கொடுத்திருப்பாங்க.. அது அவங்க விஷயம் வெளியே வந்த பிறகும் டார்ச்சர் கொடுக்குறாங்க என்று பத்திரிகையாளர் உமாபதி சர்ச்சையாக பேசி உள்ளார்.

இந்த கட்டுரையில் குறிப்பிட்ட உள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய பத்திரிக்கையாளர் உமாபதியின் தனிப்பட்ட கருத்துக்களாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே, இந்த தகவலுக்கும் அப்டேட் நியூஸ் 360 இணையதளத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 248

    0

    0