“என் ஆயுள் ரேகை நீயடி”..ஜி.வி பாடியதை ரசித்த சைந்தவி…உற்சாகத்தில் ரசிகர்கள்..!
Author: Selvan8 December 2024, 2:03 pm
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த தருணம்
தமிழ் திரையுலகில் நிறைய பிரபலங்கள் அவர்களுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து பெற்று வாழ்கின்றனர்.
சிலருடைய பிரிவு ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தும்,அந்த வகையில் தான் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷும் அவரது மனைவி சைந்தவி பிரிந்தது ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியாக்கியது.
சிறுவயதில் இருந்தே இருவரும் காதலித்து,பின்பு திருமணம் செய்து கொண்டனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.இவர்கள் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என பல ரசிகர்கள் தங்களுடைய கோரிக்கைகளை கூறி வந்தனர்.
இதையும் படியுங்க: மணக்கோலத்தில் நடிகர் காளிதாஸ்…குருவாயூரில் நடந்த திருமணம்…!
இந்த நிலையில் சைந்தவி சில நாட்களுக்கு முன்பு ஜி வி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் பாடப்போவதாக அறிவித்தார்.இதனை கேட்டு ரசிகர்கள் அந்த இசை நிகழ்ச்சிக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
இசையால் இருவரும் இணைவதை அனைவரும் பாராட்டி வந்த நிலையில்,நேற்று பிரம்மாண்டமாக மலேசியாவில் அரங்கேறிய இசை நிகழ்ச்சி மேடையில்,சைந்தவி பாட ஜி வி பிரகாஷ் இசையமைக்க,அங்கிருந்த ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
அதில் குறிப்பாக மயக்கம் என்ன படத்தின் பிறை தேடும் பாடலின் ஒரு பல்லவியை சைந்தவி பாடி முடிக்கும் போது,திடீரென ஜி வி “என் ஆயுள் ரேகை நீயடி” என அடுத்த வரியை பாட அங்கே இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.
GV and Saindhavi sang Pirai Thedum together at the concert 🥹❤️#GVP @gvprakash
— தனிக்காட்டு ராஜா™ (@itz__Sugu) December 8, 2024
pic.twitter.com/X3lmhBrXYD
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி,இருவரும் மீண்டும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.