தயாரிப்பாளரை திருப்தி படுத்தி பட வாய்ப்பு பெரும் சாய்பல்லவி – ஷாக் ஆன ரசிகர்கள்!

Author: Shree
13 May 2023, 9:40 pm

நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஹீரோயினுக்கு ஏத்த எந்த வரையறையும் இல்லாமல் வித்தவுட் மேக்கப்பில் நேச்சுரலாக வலம் வருவது தான் இவரின் தனி அழகு . இவர் சமீப காலமாக, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து தனது நடிப்பு திறமையை காட்டி வருகிறார் நடிகை சாய் பல்லவி. அழகான தோற்றம் கொண்டு ரசிகர்களை கவர்ந்த இவர், கிளாமரான காட்சிகளில் நடிக்க தடை போட்டு இருக்கிறார். படுக்கை அறை காட்சிகள், முத்த காட்சிகள் இருந்தால் அந்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

இந்நிலையில் சாய்ப்பல்லவி நடிக்கிறார் என்றாலே தயாரிப்பாளர்கள் செம குஷி ஆகிவிடுகிறார்களாம். காரணம் அவர் தன்னால் தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் நஷ்டம் வந்து விடக்கூடாது என எண்ணி கால்ஷீட் கொடுத்த நாள் அன்று குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து மேக்கப் செய்துக்கொண்டு பக்காவாக நடிக்க தயாராகிவிடுகிறாராம். இதனால் சாய்ப்பல்லவியை புக் செய்ய அவரை நோக்கி தயாரிப்பளார்கள் படையெடுக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. .

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!