“மழையில நெனைஞ்ச வெடக்கோழி..” சைத்ரா ரெட்டியின் லேட்டஸ்ட் Video !
Author: Udayachandran RadhaKrishnan9 February 2022, 11:53 am
சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நட்சத்திரங்களும் தொகுப்பாளினிகளும் அதிக அளவு மக்களிடையே பேமஸ் ஆகி வருகின்றனர். அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் தான். அந்த வரிசையில் தற்போது சைத்ரா ரெட்டியும் இணைந்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி சீரியலில் நடித்து வருகிறார் சைத்ரா ரெட்டி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சீரியலிலும் நடித்து வருகிறார். ரக்கட் என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் தான் ராகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஏற்கனவே ரசிகர் வட்டம் உருவாக்கியிருந்த நிலையில், சமீபமாக இன்ஸ்டாகிராமால் இளசுகளும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் போடும் போஸ்ட்டுகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்.
தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், மழையில நினைவது போல, குளிரில் நடுங்கியபடி சூப்பர் Hot Expression கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள், “செம்ம Dedication..” என்று கமெண்ட் அடித்து உள்ளார்.