ஹீரோயின் வாய்ப்பு தரேன்னு சொல்லி என்கிட்ட.. அட்லீ குறித்து பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!

Author: Vignesh
2 February 2024, 4:45 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

sakshi agarwal - updatenews360

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

sakshi agarwal - updatenews360

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார். இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இதனிடையே, பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சாக்‌ஷி அகர்வால் நான் பெங்களூரில் இருந்த சமயத்தில், ராஜா ராணி பட வாய்ப்பு வந்தது. அப்போது, நான் மாடலிங் செய்து கொண்டிருந்த சமயம் என்னுடைய காஸ்டிங் ஏஜென்சியை தொடர்பு கொண்டு ராஜா ராணி படத்தில் நடிப்பது குறித்து பேசினார்கள்.

sakshi agarwal - updatenews360

என்னிடம் படத்தில் ஆர்யா ஹீரோ நீங்கள் இரண்டாம் ஹீரோயின் என்று கூறினார்கள். அந்த நேரத்தில், எனக்கு தயாரிப்பு பற்றி எல்லாம் பெரிய அளவில் தெரியாது. அப்போது, அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பினேன். அவர்கள் கூறியவாறு இரண்டாம் நாள் ஷூட்டிங் அதன் பின்பு எனக்கு எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. கடைசியில் பார்த்தால் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டு ரிலீஸ் ஆகிவிட்டது. அப்போது, இது தொடர்பாக நான் இயக்குனிடம் பேசி இருக்கணும், பேசாமல் விட்டது பெரிய தப்பு. அட்லீ எனக்கு ஹீரோயின் வாய்ப்பு தரேன் என்று சொல்லி எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என்று சாக்‌ஷி அகர்வால் புலம்பி தள்ளியுள்ளார்.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 372

    0

    0