ராஜா ராணி படத்தை பற்றி கேட்காதீங்க…. அந்த ரோலில் நடித்தது குறித்து மனம் குமுறிய சாக்ஷி அகர்வால்!

Author: Shree
2 September 2023, 5:24 pm

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினார்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகை சாக்ஷி, ஆரம்பத்திலே ராஜா ராணி படம் குறித்து கேட்டீங்கன்னா நான் உண்மையில் உண்மையில் சந்தோஷமாக இல்லை. காரணம் பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் படம் நயன்தாரா, ஆர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். நீங்கள் தான் இரண்டாவது ஹீரோயின் என சொல்லி தான் என்னை கூப்பிட்டு அதுபோன்ற காட்சியில் என்னை நடிக்க வைத்து ஏமாற்றிவிட்டார் என்ற மன வருத்தத்தோடு கூறினார். இதோ அந்த வீடியோ:

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 549

    0

    0