சத்தமே இல்லாமல் திருமணம் செய்த சாக்ஷி அகர்வால் : மாப்பிள்ளை இவரா? ரசிகர்கள் ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan3 January 2025, 5:47 pm
சின்ன சின்ன கதாபாத்திரங்களில் சினிமாவில் தலையை காட்டி வந்த சாக்ஷி அகர்வால், தினமும் சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வந்தார்.
இதையும் படியுங்க: ஹீரோயினாக களம் இறங்கும் பிக் பாஸ் பிரபலம்…படத்தின் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் ஸ்ருதிஹாசன்..!
இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால், சற்றும் சளைக்காமல் கவலைப்படாமல் தொடர்ந்து தன்னை போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தார்.
தற்போது திடீரென திருமண கோலத்தில் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அதில் தனது சிறிய வயது முதல் நண்பர்களாக பழகி தற்போது வாழ்க்கை துணையாகி இருப்பதாக தனது காதலர் நவ்நீத் உடன் திருமணம் முடிந்துவிட்டதாக போட்டோக்களை பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட போவதாக தனது இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்குது.