தோனி மனைவி சாக்ஷி அந்த ஹீரோவின் தீவிர ரசிகையாம்….யார் தெரியுமா?

Author: Shree
25 July 2023, 5:13 pm

கேரளாவை சேர்ந்த இளம் நடிகையான இவானா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான நாச்சியார் திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படத்தில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அந்த படம் இவரது கெரியரை உச்சத்தில் நிறுத்தியுள்ளது. தொடர்ந்து கள்வன் , LGM உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

LGM படத்தை தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மேலும் நடிகை நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை ஈர்த்தது.

அந்த ட்ரைலர் வீடியோவில் மாமியாரை புரிந்துக்கொள்ள பிளான் போட்டு ட்ரிப் செல்கிறார் காதலி. அந்த பயணத்தில் ஏற்படும் பிரச்சனைகளும், பிரச்னைக்கான தீர்வுகளும் படத்தின் கதை. பின்னர் காதலி காதலுடன் சேர்ந்து அம்மாவை சேர்த்துக்கொண்டு வாழ்கிறாரா என்பதை ஸ்வாரஸ்யமாக கூறுகிறார்கள்.

இப்படத்தின் “இஸ் கிஸ் கிஃபா” என்கிற பாடல் வெளியாகி இப்பாடல் வரிகளும் அதற்கு சாண்டியின் அசத்தலான ஆட்டமும் அண்மையில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் LGM படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது.

அதில் பங்கேற்று பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் சாக்ஷி தோனி, எந்த ஹீரோ உங்களுக்கு பிடிக்கும் என்ற கேள்விக்கு, ” நான் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை என்றும் அவரது படங்கள் நான் இந்தி மிழியில் பார்த்து ரசிப்பேன் எனவும் நான் அவருடைய எல்லா படங்களையும் பார்த்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக ஓடிடி தளத்தில் வரும் முன்பே youtubeல் ஹிந்தி டப்பிங்கில் பார்த்து இருக்கிறேன் என அவர் கூறி இருக்கிறார். இதை கேட்டு அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் செம குஷியாகிவிட்டார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 356

    0

    0