“சகுனி” பட இயக்குனர் திடீர் உயிரிழப்பு…சோகத்தில் உறைந்த திரையுலகம்..!

Author: Selvan
19 December 2024, 7:37 pm

தமிழ் திரையுலகில் தொடரும் சோகம்

சகுனி திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சங்கர் தயாள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சந்தானம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சகுனி.இப்படத்தை இயக்கியவர் சங்கர் தயாள்.

Saguni director Shankar Dayal’s sudden death

இவர் தற்போது யோகி பாபுவை வைத்து தன்னுடைய அடுத்த படமான குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.இப்படத்தில் செந்தில், அகல்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் முதல் பாடலான ‘பாலிடிக்ஸ் தெர்லனா பூமரு’ என்ற பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது.

இதையும் படியுங்க: ஸ்வாமியே சரணம்…சபரிமலைக்கு சென்ற பிரபல நடிகர்…படையெடுத்த ரசிகர்கள்..!

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சங்கர் தயாள் சென்ற போது,திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது .

Shankar Dayal passes away during promotion event

பின்பு அவசர அவசரமாக சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது,அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சங்கர் தயாளின் இந்த துயர செய்தியை கேட்ட குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.அவருடைய “குழந்தைகள் முன்னேற்ற கழகம்” படம் விரைவில் வெளியாக இருந்த நிலையில் அவரது இறப்பு,படக்குழுவை அதிர்ச்சியாக்கியுள்ளது.

  • Pushpa 2 Kissik song வசனமடா முக்கியம்…ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த புஷ்பா 2 “கிஸ்ஸிக்” பாடல் வீடியோ இதோ…!
  • Views: - 44

    0

    0

    Leave a Reply