நல்ல கணவனாக, தந்தையாக இருந்ததில்லை.. உண்மையை உடைத்த சலார் பட பிரபலம்..!
Author: Vignesh24 December 2023, 12:52 pm
தெலுங்கு சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் அடையாளமின்றி இருந்த பிரபாஸுக்கு பாகுபலி திரைப்படம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இதனால் அவர் உலகம் முழுக்க பேமஸ் ஆனார். அந்த படத்தில் இவரது நடிப்பு மெய்சிலிர்க்க வைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார்.
பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் பல கோடி போட்டு அவரை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் படையெடுத்து வந்தார்கள். அதன் பின்னர் சாஹோ, போன்ற படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் தோல்வியடைந்தது. அதையடுத்து ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.
பாகுபலி படத்தை தொடர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களும் பிளாப்தான் கொடுத்து வருகிறது. இதன்பின் சலார் படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் கேஜிஎப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர்தான் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது, இவர் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சலார் வெளியாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் நீல் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசி உள்ளார். அதில், அவர் பேசுகையில் சலார் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் போதிய நேரம் செலவிட முடியவில்லை. குழந்தைகள் அழுதால் மட்டுமே அதுவும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அவர்களைப் பார்க்க வீட்டிற்கு செல்வேன். நான் ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தந்தையாகவும் இருந்ததில்லை என்று பிரசாந்த் நீல் வெளிப்படையாக பேசியுள்ளார்.