விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரெஜினாக்கு டிமாண்ட்!
Author: Hariharasudhan6 February 2025, 11:42 am
அஜித்குமார் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் படக்குழுவினருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
சென்னை: அஜித்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘விடாமுயற்சி’. இப்படம், பல்வேறு சிக்கல்களைக் கடந்து இன்று உலகமெங்கும் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அதிலும், முதல் காட்சியாக, இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு அமெரிக்காவில் திரையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் திரையிடப்பட்டது. ஆனால், தமிழகத்தில் விடாமுயற்சி படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித்தின் ரசிகர்கள், திரை விருந்தை ருசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தின் குழுவினரின் சம்பளமும், மொத்த பட்ஜெட் குறித்தான தகவல்களும் வெளியாகி உள்ளன. இதன்படி, படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அனிருத் 8 கோடி ரூபாய் ஊதியமாகப் பெற்றுள்ளார்.
மேலும், நடிகை த்ரிஷா 6 கோடி ரூபாயும், பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ் 40 லட்சம் ரூபாயும், அர்ஜுன் 5 கோடி ரூபாயும் பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மிக முக்கியமாக, படத்தின் நாயகன் அஜித்குமார் 105 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். மேலும், நடிகர் ரெஜினா கெசண்ட்ரா ஒரு கோடி ரூபாய் ஊதியம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விடாமுயற்சி படத்தின் முக்கியமான காட்சி இணையத்தில் லீக்… திருப்பம் கொடுத்த திரிஷா!
இதனிடையே, விடாமுயற்சி திரைப்படத்தின் விமர்சனங்களும் பெரும்பாலும் நேர்மறையாகவே இருக்கின்றன. சில குறிப்பிட்ட விமர்சனங்கள் கலவையாகவும், ஒரு சில விமர்சனங்கள் முழுவதுமாக எதிர்மறையாகவும், சிலர் எதிர்பார்ப்பை இன்னும் கொஞ்சம் பூர்த்தி செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதை சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிய முடிகிறது.