என்னடா Step இது? பக்கவாதம் வந்த மாதிரி… சல்மான் கானை கண்டமேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Author: Shree
20 April 2023, 3:16 pm

சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். அஜித்தின் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை கொண்டு வெளியான இப்படத்தை தற்போது இந்தியில் கிசி கி பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் ரிமேக் செய்துள்ளனர். இதில் பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியா நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில், ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, ராகவ் ஜூயல், சித்தார்த் நிகம், ஜாஸ்ஸி கில், வினாலி பட்நாகர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.

இந்த ட்ரைலரை பார்த்துவிட்டு நெட்டிசன்ஸ் அடேய் என்னடா கொத்து பரோட்டா பண்ணி வச்சியிருக்கீங்க? என கேலி செய்துள்ளனர். அதிலும் சல்மான் கானின் கெட்டப் தான் பயங்கர கேவலமாக இருக்கிறது என கூறியுள்ளார். அதில் லாங் ஹேர் வைத்து வில்லன் போன்றும் இல்லாமல், ஹீரோ போன்றும் இல்லாமல்… பார்த்தவுடன் எழுந்து ஓடிவிடுவாங்க போல என்றெல்லாம் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அப்படத்தில் புதிய வீடியோ பாடல் தற்போது இணையத்தில் நெட்டிசன்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. இந்த பாடலின் டான்ஸ் STEP ஏதோ பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டவர் ஆடுவது போல் உள்ளதாக சல்மான் கானை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்துள்ளனர். இப்படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • abhirami spoke in tamil in thug life movie press meet இங்கிலிஷா? நோ- தக் லைஃப் விழாவில் தக் லைஃப் காட்டிய அபிராமி! குவியும் பாராட்டுக்கள்