கல்யாணம் இல்லாமல் பிள்ளை பெத்துக்கணும்… அடம்பிடிக்கும் 50-வயதான நடிகர்..!
Author: Vignesh3 May 2023, 12:55 pm
சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். அஜித்தின் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளை கொண்டு வெளியான இப்படத்தை தற்போது இந்தியில் கிசி கி பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் ரிமேக் செய்துள்ளனர். இதில் பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியா நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில், ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, ராகவ் ஜூயல், சித்தார்த் நிகம், ஜாஸ்ஸி கில், வினாலி பட்நாகர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது.
இதனை பார்த்துவிட்டு நெட்டிசன்ஸ் அடேய் என்னடா கொத்து பரோட்டா பண்ணி வச்சியிருக்கீங்க? என கேலி செய்துள்ளனர். அதிலும் சல்மான் கானின் கெட்டப் தான் பயங்கர கேவலமாக இருக்கிறது என கூறியுள்ளார். அதில் லாங் ஹேர் வைத்து வில்லன் போன்றும் இல்லாமல், ஹீரோ போன்றும் இல்லாமல்… பார்த்தவுடன் எழுந்து ஓடிவிடுவாங்க போல என்றெல்லாம் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இதனிடையே, சல்மான் கான் சமீபத்தில் திருமணம் குறித்தும் தன் முன்னாள் காதலிகள் குறித்தும் உருக்கமாக பேசியுள்ளார். இதில், தன் காதல் முதன் முறையாக ப்ரேக் அப் ஆன போது, அந்த பெண் மீது கோபப்பட்டதாகவும், ஆனால், தற்போது தான் புரிகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தவறு தன் மீது தான் உள்ளது என்றும், அதோடு தனக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், அதே நேரத்தில் திருமணம் ஆகாமல், குழந்தை பெற்றுக்கொள்வதை நம் சட்டமும் ஏற்காதே, என வருத்தமாக சல்மான் பேசியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், சார் இதெல்லாம் உங்ககளுக்கே ஓவராக இல்லையா, என கலாய்த்து வருகின்றனர்.