என்ன யூஸ்? 58 வயசு முரட்டு சிங்கிள் ஹீரோவின் மொத்த சொத்து இத்தனை கோடியா?

Author:
10 August 2024, 4:47 pm

இந்திய சினிமாவின் பிரபல ஸ்டார் ஹீரோவான சல்மான்கான் 58 வயதாகியும் இன்னும் திருமணமே செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பல கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்து வரும் சல்மான்கான் திருமணமே செய்து கொள்ளாமல் இருப்பது தான் பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

58 வயதாகியும் அவர் கல்யாணம் பண்ணாமலே வாழ்க்கை நகர்த்தி வருகிறார் . எப்போது திருமணம்? என ரசிகர்கள் கேட்டு கேட்டு…. ஆய்ந்து ஓய்ந்து விட்டார்கள். முன்னதாக இவர் நடிகை ஐஸ்வர்யா ராய்யை உருகி உருகி காதலித்து வந்தார். ஆனால் அதன் பின்னர் சல்மான் கானின் காதல் டார்ச்சர் தாங்க முடியாத ஐஸ்வர்யா ராய் அவர் விட்டு ஓடிவிட்டார் .

இதனால் சல்மான்கான் திருமணமே செய்யாமல் 58 வயதாகியும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்துள்ளது. ஒரு படத்திற்கு ரூ. 100 முதல் … ரூ 150 கோடி சம்பளம் வாங்கும் சல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2900 கோடி என கூறப்படுகிறது.

சொந்தமாக மும்பையில் ரூ. 100 கோடி பங்களா, 150 ஏக்கர் பண்ணை நிலம், சொகுசு பண்ணை வீடு, துபாயில் அபார்ட்மெண்ட், பீச் ஹவுஸ், கோடிக்கணக்கில் சொகுசு கார்கள் என ராஜ் வாழ்க்கை வாழ்கிறார். இவரின் சொத்து மதிப்பு கேட்டு வாயடைத்து போன ரசிகர்கள் எல்லோரும் இம்புட்டு சொத்து வச்சிருந்தும் என்ன பிரயோஜனம்? ஒண்டிக்கட்டையா தானே வாழ்க்கை ஓட்டணும் என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி