பொது மேடையில் இப்டியா பண்ணனும்..! பூஜா ஹெக்டே உடையை கடித்த சல்மான் கான்.. வைரல் வீடியோ..!

Author: Rajesh
28 February 2022, 4:47 pm

விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தில் இருந்து ஏற்கனவே வெளியாகியுள்ள அரபிக் குத்து பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகியுள்ளது. தொடர்ந்து, 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை குவித்து சாதனை படைத்துள்ளது.

இதனிடையே இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து பல வருடங்களுக்கு பிறகு தமிழ் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், மும்பையில் நடந்த விழா ஒன்றில் நடிகை பூஜா ஹெக்டே நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.

அப்போது சல்மான் கான் அவரின் படத்தில் வருவது போல நடனமாட முயற்சித்துள்ளார். ஆனால் பூஜா ஹெக்டேவின் அணிந்திருந்த உடையின் காரணமாக அவரால் அந்த ஸ்டேப்பை போடமுடியாமல் நடந்து செல்கிறார். பின்னால் சென்ற சல்மான் கான் அவரின் பின்னால் ஒரு உடையினை கடித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

https://twitter.com/SalmanSajidBha6/status/1497691966720471041
  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!