பிரபல நடிகையிடம் ஆடை கழட்டி அந்தரங்க அழகை காட்டிய சல்மான் கான் – வைரலாகும் வீடியோ!
Author: Shree11 April 2023, 7:49 pm
அல்ட்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி மிகப்பெரிய வெற்றி கொடுத்தார். இப்படத்தை தற்போது இந்தியில் கிசி கா பாய் கிசி கி ஜான் என்ற பெயரில் ரிமேக் செய்துள்ளனர். இதில் பிரபல பாலிவுட் நட்சத்திர நடிகர் சல்மான் கான் நடித்துள்ளார் அவருக்கு ஜோடியா நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில், ஜெகபதி பாபு, பூமிகா சாவ்லா, ராகவ் ஜூயல், சித்தார்த் நிகம், ஜாஸ்ஸி கில், வினாலி பட்நாகர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் அடேய்… தல படத்தை என்னடா பண்ணிவச்சிருக்கீங்க? என திட்டி தீர்த்தனர்.
இந்நிலையில் மும்பையில் படு பிரமாண்டமாக நடைபெற்ற படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சல்மான் கானிடம் அங்கிருந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அவரது பைசெப்ஸ் மற்றும் சிக்ஸ் பேக்கை காட்ட சொல்லி அடம்பிடித்தனர். உடனே பக்கத்தில் நடிகை பூஜா இருக்கிறாரே என்பதை கூட யோசிக்காமல் சட்டையை கழட்டி தன் அந்தரங்க அழகை மேடையிலேயே காட்டினார் சல்மான் கான். இதை இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்;